தமிழக பழங்குடிகள்:
தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடியாகும். அதில் பட்டியலின பழங்குடி மக்கள் தொகை சுமார் 7.94 இலட்சமாகும். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.1 சதவீதம் மட்டுமே.
அடியான், அரநாடன், இரவாளன், இருளர், ஊராளி, கணியான், கம்மாரா, காட்டு நாயக்கர், காடர், காணிக்காரன், குறும்பர், குறிச்சான், குடியர் / மலைக்குடி, கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பளியர், பள்ளியன், பள்ளேயன், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக்குறவர், மலை பண்டாரம், மலைய கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுவன் / முடுகர் என தமிழக அரசின் அட்டவனைச் சாதிகள், அட்டவனைப் பழங்குடிகள் சட்டப்படி (1976) தமிழகத்தில் மொத்தம் 36 பழங்குடி சமூகங்கள் உள்ளன. கசபர், எருகுலர், ஏனாதி, நரிக்குறவர், கோடைமலைப் புலையர், குன்னுவர் உள்ளிட்ட உண்ணும் சில சமூகத்தார் தமிழத்தில் உண்மையிலேயே பழங்குடியினர் நிலையில் இருப்பினும் கூட, சட்டப்பூர்வமாக இவர்கள் அட்டவணைப் பழங்குடிகள் என அறிவிக்கப்படவில்லை.
புலையர்கள் 1970களுக்கு முன் பழங்குடியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அட்டவணைச் சாதியாக மாற்றப் பட்டனர். 1956இல் பழங்குடியினர் பட்டியலைத் திருத்தியமைத்த ஆணையின்படி தமிழகத்தில் ௪௨ சமூகங்கள் அட்டவணைப் பழங்குடிகளாக அங்கீகாரம் பெற்றிருந்தன.
2001 கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிகமான மக்கள் தொகையுடைய பழங்குடி மலையாளிகள் ஆவர். மலையில் வாழ்வதால் மலையாளி, கேரளா மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வகை தொடர்புமில்லை. குறைந்த மக்கள் தொகை கொண்ட பழங்குடி அரநாடன் ஆவர். இம்மக்களின் எண்ணிக்கை 44 மட்டுமே.
தொன்மதுரையும் தொல்குடிகளும்:
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகை 30.38 இலட்சமாகும். அதில் பட்டியல் பழங்குடிகளின் மக்கள் தொகை 11,096 ஆகும். இது மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதம் மட்டுமே.
பளியர், பள்ளியன், பள்ளேயன், மலைக்குறவர், மலைவேடர், மன்னான், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் மதுரை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய மலைப்பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
வேடன், மலைவேடன், வேடநாயக்கன்(ர்) என்றெல்லாம் அழைக்கப்படும் மலைவேடர் பூர்வ தொல்குடிகளில் ஒருவராரவர். இவர்கள் இன்றைய மதுரையிலிருந்து கேரளம் கேரளம் வரை பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக்கு காலந்தொட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இன்று மதுரை என்று அழைக்கப்படும் நகரத்தின் பெயர் கி.மு. 75 வரை 'கூடல்' என்பதே. பண்டைய கூடல் பகுதியை வேடர் குடித் தலைவன் அகுதை என்பவன் ஆட்சி செய்தான் என்பது வாய்மொழி வரலாறு. இன்றும் மலை வேடர்களிடம் இவ்வழக்கு உள்ளது. இந்த மக்களிடம் வழங்கும் இனவரலாற்றின்படி குறுநில மன்னனாக திகழ்ந்த அகுதை என்பவன் குடலுக்கு கிழக்கே கொற்கையை தலைநகராக கொண்டு கடற்கரை பகுதியை ஆட்சி செய்து வந்த பூதப்பாண்டியனை வென்றுள்ளான். மேலும் குடலுக்கு வடக்கே ஆட்சி செய்து வந்த ஆயர்குல தலைவன் 'முதலாம் எவ்வி' எனும் குறுநில மன்னனையும் வென்றுள்ளான்.
கூடலுக்கு தெற்கே அதிகன் என்ற வேடர் குல அரசன் இன்றிய திருவிதாங்கூர், சதுரகிரி மலை, காந்த மலை, முதலான பகுதிகளை பெரும் படையுடன் ஆண்டு வந்தான். அவனுடன் அகுதை போரிடவில்லையாம். இருவரும் வேடர் இனத் தலைவர்கள் என்பதால் ஒருவர் மீது ஒருவர் போர் தொடருக்காமல் வேடர் குடியின் ஆட்சியைப் போற்றி வந்தார்களாம்.
மதுரை மீனாட்சி கோயிலில் வேடர்களுக்கென்று தனித்துவமான பங்குண்டு. கோயிலின் அட்டா சக்தி மண்டபத்திற்கு அடுத்துள்ளது 'வேட மண்டபம்' ஆகும். இம்மண்டபத்தின் இருபுறமும் ஆறு அடி உயரம் கொண்ட வேட்டுவச்சி, வேடுவர் சிலைகள் உள்ளன. வேடுவர்களின் உரிமை காட்டுவதாகவே இம்மண்டபம் அமைந்துள்ளது. வில் அம்புகளை கொண்டு வேட்டையாடுவதால், இவர்களை வில்லர்கள், வில்வேடர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதுரை வில்லாபுரம் என்பது முன்பு வில்லர்புறமாக அழைக்ப்பட்டகாகவும், அப்பகுதியில் வேடர்கள் பரவி இருந்ததாகவும், அதற்கு ஆதாரமாக அப்பகுதியில் பாரம்பரியமாக சொந்த நிலங்கள் இன்றும் மலைவேடர்களிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் வேடக்குல ஆய் மன்னனுக்குரிய மரியாதையை இன்றும் திருவிழாக்களின் போது வேட நாயக்கர்கள் பெறுகிறார்கள்.
அதிகன் வழி வந்தோர் கேரளத்திலும், அகுதை வழி வந்தோர் தமிழகத்தில் மதுரை, பழனி, உள்ளிட்ட பகுதிகளிலும் வாழ்கின்றனர். எனினும், அனைவரும் வேடர், மலைவேடர் எனும் பொது அடையாளத்தை கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்ட மலைவேடர்கள் அழகர் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில்தான் முதல் மொட்டை அடிப்பார்கள். மலை வேடர்களின் குடும்ப தெய்வங்கள் எல்லாம் கையில் வில், அம்பு ஏந்தியவர்களாய் இருக்கின்றனர். வேடர் குலத்தவர் கண்ணப்ப நாயனாரின் வழி வந்தவர்கள் வந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு வருடமும் தை மாதம் வளர்பிறையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவா ஆலயங்களில் குருபூசை செய்வார்கள். திருப்பரங்குக்குன்றத்தில் மலைவேடர்களுக்கு சொந்தமான வேடர் மடத்திற்குப் பங்குனி மாதம் முருகன் எழுந்தருளுவார். இது மரபாகும். பல ஊர்களிலிருந்தும் மலைவேடர்கள் கலந்து கொள்வார்கள். கண்ணப்ப குல வேடர்களே மலைவேடர்கள் என்பதால் இந்த உரிமை இவர்களுக்கு கிடைக்கிறது. மதுரை அருகேயுள்ள பறம்பு (பிரான்மலை) மலையை பாரி எனும் கடையெழு வள்ளல் ஆட்சி செய்து வந்தான். இம்மன்னனும் மலைவேடர் என்று கூறுகிறார்கள். (தகவல்: ச.தவமணி, மண்ணாடிமங்கலம், வாடிப்பட்டி, மதுரை)
பளியர் 'பழையோர்' (ஆதிமக்கள்) என்றே பெயர் பெற்றிருந்தனர். கால ஓட்டத்தில் பழையோர் > பழியர் என்றாகிவிட்டது. பழையர் பற்றிய குறிப்புகள் அகநானூற்றிலும் (201.6.7,;331.5) காணப்படுகின்றன. பழனிமலைக்குரிய பழனியன் 'பளியர்' என்று மருவி வந்துவிட்டது என்பது இன்னொரு கருத்தாகும்.
பழனி மலையின் மேற்பள்ளதாக்கிலும் வருசநாட்டுப் பள்ளத்தாக்கில் ஏலாக்காய் மாலையிலும் காடுகளிடையே வாழ்கின்றனர். ஈத்தை புல்லால் வேயப்பட்ட குடிசைகளைத் தவிர மரங்களின் மேல் மேடைகள் அமைத்தும், குகைகள், பாறைகளின் அடிப்பகுதி ஆகிய இடங்களில் தற்காலிகமாக தங்கியும் வாழ்வார்கள்.
பழங்குடி சமூகங்களின் தலைவனுக்கு சில சலுகைகளும், தகுதியும் அதிகமாக இருக்கும். பளியர் தலைவன் இரவில் தூங்கும் போது இருபுறம் கணப்புப் (நெருப்பு) போட்டுக் கொண்டு அவற்றிற்கிடையே படுத்துறங்கும் உரிமை கொண்டவன். மற்றவர்கள் இரு பக்கம் மட்டுமே கணப்பு போட்டுக் கொள்ளலாம். மேற்கூறிய சலுகையில் தொடர்ச்சியாக பளியர் தலைவன் மட்டும் இரண்டு மனைவிமார்களுடன் வாழும் உரிமை கொண்டவனாகிறான். கணப்பு அணையாமல் தலைவன் நிம்மதியாக தூங்குவதற்கு இரண்டு மனைவிமார்களும் முறைவைத்து மாறி மாறி கணப்பினைக் காத்து வருவார்கள்.
பளியர்களின் வேட்டை முறை பலவகையானது. அதில் ஒண்டு தண்ணீர் வைத்துப் பிடிப்பது. இது ஒரு எளிய உத்தி முறையாகும். வேட்டைக்குச் செல்லும் பளியர்கள் தலையில் சட்டி நிறையத் தண்ணீரை சுமந்து செல்வார்கள். கோடை காலத்தில் தண்ணீரைப் பாறையில் உள்ள பள்ளத்தில் ஊற்றிவிட்டு அருகில் உள்ள புதரில் மறைந்து கொள்வார்கள். தண்ணீரை குடிக்க வரும் மான், காட்டுப் பன்றி, மயில், எதுவாயினும் பிடித்துவிடுவார்கள். குழிவெட்டி தழைகளை அதன் மீது மூடி, பெரிய காட்டு விலங்குகளை பிடிக்கின்றனர். முருகனின் மனைவியாகிய வள்ளி தங்கள் சமூகத்தவர் என்று பெருமிதத்துடன் கூறுகின்றார்கள்.
அநீதியால் கொல்லப்பட்ட தன் கணவனின் மரணத்திற்கு நீதிவேண்டி முறையிடுகிறாள் கண்ணகி. சினம் தணியாத கண்ணகி மதுரை மாநகர் தீக்காடாகிறது. மதுரையை எரித்தபின் கண்ணகி அங்கிருந்து மேற்கே வைகைஆற்றின் தென்கரை வழியாக 14 நாட்கள் நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணேத்திப்பாறை (தற்போதைய வண்ணாத்திபாறை) வந்தடைகிறாள். இங்குவாழ்ந்த குன்றக்குறவர்கள் ஆடிய குறவைக் கூத்தினைப்பார்த்து அவளது கோபம் சற்றுத்தணிகிறது. அக்கானவர்கள் கேட்டதற்கிணங்கத் தன்வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணிலிருந்து தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து பூப்பல்லக்கில் ஏற்றி விண்ணோக்கி அழைத்துச்சென்றதாகவும், இக்காட்சிகளைக் கண்ட மலைவாழ் மக்களான கானவர்கள் மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் கூற அவன் இமயம்வரை சென்று கல்லெடுத்து கனகவிசயர் தலையிலேற்றிக் கொணர்ந்த கல்லில் கண்ணகிக்கு சிலையெடுத்து கோவில்கட்டுவித்தான் அதுதான் மங்கலதேவி கண்ணகிக்கோட்டம் எனவும் இளங்கோ விவரிக்கின்றார். இக்கோவில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூருக்கு தெற்கே பளியன் குடியிலிருந்து 5000 அடி உயரத்தில் விண்ணேந்திப் பாறையில் அமைந்துள்ளது என பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் நிறுவினார்.
பளியன்குடி – மலைவாழ் பளியர் இன மக்கள் வாழும் தொன்மையான பகுதியாகும். இது மிகச்சரியாகக் கண்ணகி கோட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியாகும். இம்மக்களின் வாழ்வாதாரம் வண்ணாத்திப்பாறை, வேங்கக்காடு என்கின்ற மலைப்பகுதிகளேயாகும். சிலப்பதிகாரம் சுட்டும் குன்றக்குறவர் இவர்களே என்று துணிவதற்குப் பல சான்றுகள் உள்ளன. இம்மக்களது குலதெய்வம் பளிச்சியம்மன். பளிச்சியம்மனுடைய தொன்மக் கதை கண்ணகியுடன் தொடர்புடையதாக உள்ளது. தவறான தீர்ப்புக்காக மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து நடைபயணமாக கூடலூர் பளியங்குடியை அடைகிறார். மாலை நேரத்தில் அங்குள்ள மலையில் ஏறுகையில் எதிர்வரும் பளிங்கர் இனப்பெண் தன் சேலையை கிழித்து தீப்பந்தமாக்கி தந்தார். மிருகங்கள் உலாவும் மலையில் தன்னை காக்க நினைத்த பெண்ணை பளிச்சியம்மன் தெய்வமாகி, மக்களை காக்குமாறு கண்ணகியம்மன் வரம் தந்தார் என்ற தொல்கதைகளும் அம்மக்களிடையே புழங்குகிறது. கி.பி.11ஆம் நூற்றாண்டு வரை கண்ணகி கோவில் ‘பளியர்’ என அழைக்கப்படும் மன்னர்களால் தொடர்ந்து தினசரி பூசை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இக்கோவில் வளாகத்திலேயே உள்ளது.

வணக்கம் உண்மை அருமை அற்புதம் நன்றி
பதிலளிநீக்குஅருமை. இவ்வினக் குழுக்களின் இசை கருவிகள் யாவை?
பதிலளிநீக்கு