இடுகைகள்

பளியர்

தமிழக பழங்குடிகள்: தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21  கோடியாகும். அதில்  பட்டியலின பழங்குடி மக்கள் தொகை சுமார் 7.94 இலட்சமாகும்.  இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.1 சதவீதம் மட்டுமே. அடியான், அரநாடன், இரவாளன், இருளர், ஊராளி, கணியான், கம்மாரா, காட்டு நாயக்கர், காடர், காணிக்காரன், குறும்பர், குறிச்சான், குடியர் / மலைக்குடி, கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர்,  தொதவர், பளியர், பள்ளியன், பள்ளேயன், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக்குறவர், மலை பண்டாரம், மலைய கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுவன் / முடுகர் என தமிழக அரசின் அட்டவனைச் சாதிகள், அட்டவனைப் பழங்குடிகள் சட்டப்படி (1976) தமிழகத்தில் மொத்தம் 36 பழங்குடி சமூகங்கள் உள்ளன.  கசபர், எருகுலர், ஏனாதி, நரிக்குறவர், கோடைமலைப் புலையர், குன்னுவர் உள்ளிட்ட உண்ணும் சில சமூகத்தார் தமிழத்தில் உண்மையிலேயே பழங்குடியினர் நிலையில் இருப்பினும் கூட, சட்டப்பூர்வமாக இவர்கள் அட்டவணைப் பழங்குடிகள் என அறிவிக்கப்படவில்லை. புலையர்கள் ...
சமீபத்திய இடுகைகள்